/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பயிற்சியாளரை பிரிந்தார் நீரஜ் சோப்ரா
/
பயிற்சியாளரை பிரிந்தார் நீரஜ் சோப்ரா
ADDED : ஜன 10, 2026 10:44 PM

புதுடில்லி: இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தனது பயிற்சியாளர் ஜெலெஸ்னியை பிரிந்தார்.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 28. ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் (2016, தங்கம்), தெற்காசிய விளையாட்டு (2016, தங்கம்), ஆசிய சாம்பியன்ஷிப் (2017, தங்கம்), ஆசிய விளையாட்டு (2018, 2022ல் தங்கம்), காமன்வெல்த் விளையாட்டு (2018, தங்கம்), டைமண்ட் லீக் (2022ல் தங்கம், 2023-25ல் வெள்ளி), உலக சாம்பியன்ஷிப் (2023ல் தங்கம், 2022ல் வெள்ளி), ஒலிம்பிக்கில் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) பதக்கங்களை அள்ளினார்.
கடந்த ஆண்டு நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளராக முன்னாள் செக்குடியரசு ஈட்டி எறிதல் வீரர் ஜான் ஜெலென்ஸி 59, ஒப்பந்தமானார். இவரது பயிற்சியின் கீழ், தோகா டைமண்ட் லீக் (2025) போட்டியில் முதன்முறையாக 90.23 மீ., எறிந்தார் நீரஜ் சோப்ரா. இந்நிலையில் நேற்று, தனது பயிற்சியாளர் ஜெலெஸ்னியை பிரிவதாக நீரஜ் சோப்ரா அறிவித்தார். ஆனால் இதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து நீரஜ் கூறுகையில், ''ஜெலெஸ்னி பயிற்சியின் கீழ், புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஈட்டி எறிதல் குறித்து அவர் சிந்திக்கும் விதம் நம்பமுடியாதவை. அவருடன் இணைந்து பணியாற்றியதை என்றும் மறக்க முடியாது. அவர் சிறந்த வீரர் மட்டுமின்றி, நான் சந்தித்தவர்களில் நல்ல மனிதராகவும் திகழ்கிறார். உலக சாம்பியன்ஷிப் (2027), ஒலிம்பிக் (2028) போட்டி மீது கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு நானே பயிற்சியாளராக செயல்பட திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.

