/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நீரஜ் சோப்ரா விலகல்: செக்குடியரசு தடகளத்தில் இருந்து
/
நீரஜ் சோப்ரா விலகல்: செக்குடியரசு தடகளத்தில் இருந்து
நீரஜ் சோப்ரா விலகல்: செக்குடியரசு தடகளத்தில் இருந்து
நீரஜ் சோப்ரா விலகல்: செக்குடியரசு தடகளத்தில் இருந்து
ADDED : மே 26, 2024 09:26 PM

புதுடில்லி: செக்குடியரசு தடகள போட்டியில் இருந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா விலகினார்.
செக்குடியரசில், 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' சர்வதேச தடகள போட்டி நாளை நடக்கவுள்ளது. இதில் இந்திய ஈட்டி எறில் வீரர் நீரஜ் சோப்ரா 26, பங்கேற்க இருந்தார்.
சமீபத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது இவரது தசையில் வலி உண்டானது. இதனால் இப்போட்டியில் இருந்து நீரஜ் சோப்ரா விலகினார்.
நீரஜ் சோப்ரா காயத்தால் விலகியதாக செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து இவர் கூறுகையில், ''பயிற்சியின் போது தசையில் வலி இருப்பதை உணர்ந்தேன். அடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செக்குடியரசில் நடக்கவுள்ள தடகள போட்டியில் இருந்து விலகினேன்.
மற்றபடி காயம் ஒன்றும் இல்லை. முழு உடற்தகுதியுடன் விரைவில் போட்டிக்கு திரும்புவேன்,'' என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் (2020), உலக சாம்பியன்ஷிப் (2023) போட்டியில் தங்கம் வென்ற நீரஜ், இந்த ஆண்டு தோகா டயமண்ட் லீக், பெடரேஷன் கோப்பையில் மட்டும் பங்கேற்றார். இவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.