/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா: பாகிஸ்தான் வீரருக்கு தங்கம்
/
வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா: பாகிஸ்தான் வீரருக்கு தங்கம்
வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா: பாகிஸ்தான் வீரருக்கு தங்கம்
வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா: பாகிஸ்தான் வீரருக்கு தங்கம்
ADDED : ஆக 09, 2024 01:43 AM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். பைனலில் ஏமாற்றிய இவர், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிடம் தங்கப் பதக்கத்தை பறிகொடுத்தார்.
பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா பங்கேற்றனர். தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த 'நடப்பு சாம்பியன்' நீரஜ் சோப்ரா (89.34 மீ.,), பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா (80.73 மீ.,) 18வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார்.
நேற்று பைனல் நடந்தது. இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா) உட்பட 12 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கும் தலா 3 வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் வாய்ப்பில் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தவறு செய்தனர். இரண்டாவது வாய்ப்பில் அர்ஷத் நதீம் 97.92 மீ., எறிந்து முதலிடம் பிடிக்க, நீரஜ் சோப்ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 2வது வாய்ப்பில் 89.45 மீ., எறிந்த நீரஜ் சோப்ரா, 3வது வாய்ப்பில் மீண்டும் தவறு செய்ய 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
செக்குடியரசின் ஜாகுப் வாடில்ச் (88.50 மீ.,), கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (87.87 மீ.,), கென்யாவின் ஜூலியஸ் (87.72 மீ.,), ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் (87.33 மீ.,), டிரினிடாட்டின் வால்கோட் (86.16 மீ.,), பின்லாந்தின் லாசி (84.58) அதிக துாரம் எறிந்து, 'டாப்-8' வரிசையில் இடம் பிடித்தனர். கடைசி 4 இடம் பிடித்தவர்கள் வெளியேறினர்.
'டாப்-8' இடம் பிடித்தவர்களுக்கு மீண்டும் 3 வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் மூன்று வாய்ப்புகளிலும் நீரஜ் சோப்ரா தவறு செய்ய, தங்கத்தை தக்கவைக்க முடியவில்லை. வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கம் வென்றார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (88.54 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார்.