
அஸ்தானா: எலோர்டா கோப்பை குத்துச்சண்டை பைனலுக்கு இந்தியாவின் நிகாத் ஜரீன், அனாமிகா, மணிஷா முன்னேறினர்.
கஜகஸ்தானில், எலோர்டா கோப்பை குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 52 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிகாத் ஜரீன், கஜகஸ்தானின் டோமிரிஸ் மிர்சாகுல் மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு உலக சாம்பியன்' நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
பெண்களுக்கான 60 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மணிஷா 5-0 என கஜகஸ்தானின் தங்கடர் அசெமை வீழ்த்தினார். 48 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மினாக் ஷி 5-0 என கஜகஸ்தானின் குல்னாஸ் புரிபயேவாவை தோற்கடித்து பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் (50 கிலோ) கஜகஸ்தானின் குல்னார் டுரப்பாய் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்தியாவின் அனாமிகா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சோனு (63 கிலோ), மஞ்சு பாம்போரியா (66 கிலோ) தோல்வியடைந்து வெண்கலம் வென்றனர்.