தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/நிஷாத் குமார் 'வெள்ளி': உலக 'பாரா' தடகளத்தில் அபாரம்

நிஷாத் குமார் 'வெள்ளி': உலக 'பாரா' தடகளத்தில் அபாரம்

நிஷாத் குமார் 'வெள்ளி': உலக 'பாரா' தடகளத்தில் அபாரம்


ADDED : மே 19, 2024 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2024 11:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொப: உலக 'பாரா' தடகளத்தின் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி வென்றார்.

ஜப்பானில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 11வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் 'டி47' பிரிவில் அதிகபட்சமாக 1.99 மீ., தாண்டிய இந்தியாவின் நிஷாத் குமார் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, உலக சாம்பியன்ஷிப் அரங்கில் இவர் வென்ற 3வது பதக்கம். ஏற்கனவே 2019ல் (துபாய்) வெண்கலம், 2023ல் (பாரிஸ்) வெள்ளி வென்றிருந்தார். தவிர இவர், டோக்கியோ பாராலிம்பிக் (வெள்ளி, 2020), ஆசிய பாரா விளையாட்டிலும் (தங்கம், 2022) பதக்கம் பெற்றிருந்தார்.

இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் ராம் பால், 1.90 மீ., தாண்டி 5வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.

பெண்களுக்கான 200 மீ., 'டி35' பிரிவு ஓட்டத்தின் பைனலில் இலக்கை 30.49 வினாடியில் கடந்த இந்தியாவின் பிரீத்தி பால் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

ஆண்களுக்கான குண்டு எறிதல் 'எப்40' பிரிவு பைனலில் இந்தியாவின் ரவி ரங்காலி 9.75 மீ., எறிந்து 6வது இடம் பிடித்தார். இதன்மூலம் பாரிஸ் பாரலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். இவர், ஆசிய பாரா விளையாட்டில் (2022) வெள்ளி வென்றிருந்தார்.

இதுவரை ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 2 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 29வது இடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us