/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
காலிறுதியில் நிஷாந்த் தேவ்: ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றில்

ADDED : மார் 11, 2024 10:52 PM

புஸ்டோ அர்சிசியோ: ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றில் காலிறுதிக்கு இந்தியாவின் நிஷாந்த் தேவ் (71 கிலோ) முன்னேறினார்.
இத்தாலியில், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான முதற்கட்ட உலக தகுதிச் சுற்று நடக்கிறது. ஆண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், கிரீசின் கிறிஸ்டோஸ் கராய்டிஸ் மோதினர். துவக்கத்தில் இருந்த ஆதிக்கம் செலுத்திய நிஷாந்த் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். ஹரியானாவை சேர்ந்த நிஷாந்த் 23, கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றிருந்தார்.
காலிறுதியில் நிஷாந்த், அமெரிக்காவின் ஓமரி ஜோன்ஸ் மோதுகின்றனர். இதில் நிஷாந்த் வெற்றி பெறும் பட்சத்தில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம்.
இதுவரை இந்தியா சார்பில் நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத்தி பவார் (54), பர்வீன் ஹூடா (57), லவ்லினா (75 கிலோ) மட்டும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இரண்டாம் கட்ட உலக தகுதிச் சுற்று வரும் மே 23 முதல் ஜூன் 3 வரை தாய்லாந்தின் பாங்காக்கில் நடக்கிறது.