/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நோவா லைல்ஸ் 2வது இடம்: டைமண்ட் லீக் 100 மீ., ஓட்டத்தில்
/
நோவா லைல்ஸ் 2வது இடம்: டைமண்ட் லீக் 100 மீ., ஓட்டத்தில்
நோவா லைல்ஸ் 2வது இடம்: டைமண்ட் லீக் 100 மீ., ஓட்டத்தில்
நோவா லைல்ஸ் 2வது இடம்: டைமண்ட் லீக் 100 மீ., ஓட்டத்தில்
ADDED : ஜூலை 19, 2025 09:50 PM

லண்டன்: லண்டன் டைமண்ட் லீக் 100 மீ., ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் 2வது இடம் பிடித்தார். ஜமைக்காவின் செவில்லே முதலிடத்தை தட்டிச் சென்றார்.
டைமண்ட் லீக் 16வது சீசன் 15 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11வது சுற்று லண்டனில் நடந்தது. ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் பங்கேற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவர், பந்தய துாரத்தை 10.00 வினாடியில் கடந்து 2வது இடம் பிடித்து ஏமாற்றினார். ஜமைக்காவின் ஓப்லிக் செவில்லே, இலக்கை 9.86 வினாடியில் அடைந்து முதலிடத்தை கைப்பற்றினார். பிரிட்டனின் ஜார்னல் ஹியூஸ் (10.02 வினாடி) 3வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் பிரிட்டனின் சார்லஸ் டாப்சன் (44.14 வினாடி), மாத்யூ ஹட்சன்-ஸ்மித் (44.27 வினாடி) முதலிரண்டு இடங்களை கைப்பற்றினர்.
பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் பிரிட்டனின் ஜார்ஜியா ஹன்டர் பெல் (ஒரு நிமிடம், 56.74 வினாடி) முதலிடத்தை தட்டிச் சென்றார். ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஜமைக்காவின் வெய்ன் பின்னாக் (8.20 மீ.,) முதலிடத்தை கைப்பற்றினார்.