/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பிரக்ஞானந்தா, வைஷாலி ஏமாற்றம் * நார்வே செஸ் தொடரில்...
/
பிரக்ஞானந்தா, வைஷாலி ஏமாற்றம் * நார்வே செஸ் தொடரில்...
பிரக்ஞானந்தா, வைஷாலி ஏமாற்றம் * நார்வே செஸ் தொடரில்...
பிரக்ஞானந்தா, வைஷாலி ஏமாற்றம் * நார்வே செஸ் தொடரில்...
ADDED : ஜூன் 03, 2024 11:19 PM

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, வைஷாலி தோல்வியடைந்தனர்.
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் ஓபன் பிரிவில், ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.
ஆறாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசா மோதினர். 'கிளாசிக்கல்' முறையிலான இப்போட்டி 34 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'ஆர்மகெடான் டை-பிரேக்கர்' முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரெனை சாய்த்தார். 6 சுற்று முடிவில் பிரக்ஞானந்தா (9.5 புள்ளி) மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். கார்ல்சன் (12.0) முதலிடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் நகமுரா (11.0) 2வது இடத்தில் உள்ளார்.
வைஷாலி 'ஷாக்'
பெண்களுக்கான ஆறாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, உலக சாம்பியன் சீனாவின் ஜூ வென்ஜுன் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி தவறுகள் செய்தார். 102 நகர்த்தல் முடிவில் வைஷாலி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹம்பி, சுவீடனின் பியா கிராம்லிங்கிடம் வீழ்ந்தார்.
6 சுற்று முடிவில் வைஷாலி (10.0) மூன்றாவது இடத்துக்கு பின்தங்கினார். ஜூ வென்ஜுன் (10.5), உக்ரைனின் முசிசுக் (10.5) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.