தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/நார்வே செஸ்: பிரக்ஞானந்தா கலக்கல்

நார்வே செஸ்: பிரக்ஞானந்தா கலக்கல்

நார்வே செஸ்: பிரக்ஞானந்தா கலக்கல்


ADDED : ஜூன் 02, 2024 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2024 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் 5வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் காருணாவை வீழ்த்தினார்.

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் ஓபன் பிரிவில், ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.

ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலகின் 'நம்பர்-2' வீரரான அமெரிக்காவின் பேபியானோ காருணாவை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இவர், 77வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, 'பிடே' உலக தரவரிசையில் 13வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு முன்னேறினார்.

மற்ற 5வது சுற்று போட்டிகளில் கார்ல்சன் (எதிர், அலிரேசா, பிரான்ஸ்), நகமுரா (எதிர், டிங் லிரென், சீனா) வெற்றி பெற்றனர்

ஐந்து சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடங்களில் அமெரிக்காவின் நகமுரா (10 புள்ளி), நார்வேயின் கார்ல்சன் (9) உள்ளனர்.

வைஷாலி வெற்றி

பெண்களுக்கான 5வது சுற்றில் தமிழகத்தின் வைஷாலி, டிங்ஜீ லீ மோதினர். இதில் வைஷாலி வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹம்பி, 'நடப்பு உலக சாம்பியன்' சீனாவின் ஜு வென்ஜுனிடம் தோல்வியடைந்தார். ஐந்து சுற்றுகளின் முடிவில் வைஷாலி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இரு இடங்களில் உக்ரைனின் அனா முசிசுக் (9 புள்ளி), சீனாவின் ஜு வென்ஜுன் (7.5) உள்ளனர். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி (4 புள்ளி) 5வது இடத்துக்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us