sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

குகேஷை வென்றார் கார்ல்சன் * நார்வே செஸ் தொடரில்...

/

குகேஷை வென்றார் கார்ல்சன் * நார்வே செஸ் தொடரில்...

குகேஷை வென்றார் கார்ல்சன் * நார்வே செஸ் தொடரில்...

குகேஷை வென்றார் கார்ல்சன் * நார்வே செஸ் தொடரில்...


ADDED : மே 27, 2025 11:14 PM

Google News

ADDED : மே 27, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்டாவஞ்சர்: நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஓபன் பிரிவில், நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே) உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் குகேஷ்-கார்ல்சனை சந்தித்தார். போட்டியின் 45 நகர்த்தல் வரை இருவரும் சம நிலையில் இருந்தனர். 46வது நகர்த்தலில் குகேஷ் தவறு செய்தார். முடிவில் 55வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியடைந்தார்.

அர்ஜுன், சீனாவின் வெய் இ மோதிய போட்டி 'டிரா' ஆனது. பின் நடந்த 'டை பிரேக்கரில்' அர்ஜுன் வெற்றி பெற்றார். முதல் சுற்று முடிவில் கார்ல்சன் (3.0), நகமுரா (3.0), அர்ஜுன் (1.5) முதல் 3 இடத்தில் உள்ளனர்.

ஹம்பி அபாரம்

பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஹம்பி, வைஷாலி மோதினர். இதில் ஹம்பி 44வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். ஹம்பி (3.0), உக்ரைனின் அனா முஜிசக் (1.5), சீனாவின் டிங்ஜீ (1.5), 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us