தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ அர்ஜுனை வீழ்த்தினார் குகேஷ்

அர்ஜுனை வீழ்த்தினார் குகேஷ்

அர்ஜுனை வீழ்த்தினார் குகேஷ்


ADDED : ஜூன் 03, 2025 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2025 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் குகேஷ், சக வீரர் அர்ஜுனை வீழ்த்தினார்.

நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்கல்') தொடர் நடக்கிறது. 7வது சுற்றில் நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ் 19, சக வீரர் அர்ஜுனை சந்தித்தார். 92 வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார்.

7 சுற்று முடிவில் அமெரிக்காவின் காருணா (12.5), குகேஷ் (11.5) முதல் இரு இடத்துக்கு முன்னேறினர். நார்வேயின் கார்ல்சன் (11.0), 3வது இடத்தில் பின் தங்கினார். அர்ஜுன் (7.5) 5வது இடத்தில் உள்ளார்.

பெண்கள் பிரிவு ஏழாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் டிங்ஜீயிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் ஹம்பி, உக்ரைனின் அனா முஜிசக் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டை பிரேக்கர்' போட்டியும் 'டிரா' ஆனது.

முடிவில் சீனாவின் வென்சுன் (11.5), அனா முஜிசக் (11.0), ஹம்பி (10.5) முதல் மூன்று இடத்தில் உள்ளனர். வைஷாலி (8.0) 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us