/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஒடிசா பெண்கள் அணி சாம்பியன்: ஹாக்கி இந்தியா லீக் தொடரில்
/
ஒடிசா பெண்கள் அணி சாம்பியன்: ஹாக்கி இந்தியா லீக் தொடரில்
ஒடிசா பெண்கள் அணி சாம்பியன்: ஹாக்கி இந்தியா லீக் தொடரில்
ஒடிசா பெண்கள் அணி சாம்பியன்: ஹாக்கி இந்தியா லீக் தொடரில்
ADDED : ஜன 26, 2025 09:48 PM

ராஞ்சி: பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடரில் ஒடிசா அணி சாம்பியன் ஆனது.
ராஞ்சி (ஜார்க்கண்ட்), ரூர்கேலாவில் (ஒடிசா) பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் நடந்தது. ராஞ்சியில் நடந்த பைனலில் சூர்மா ஹாக்கி கிளப் (பஞ்சாப், ஹரியானா), ஒடிசா வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் ஒடிசா அணியின் ருதுஜா, ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதற்கு, 28வது நிமிடத்தில் சூர்மா அணிக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் பென்னி ஸ்குவிப் ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் எழுச்சி கண்ட ஒடிசா அணிக்கு 56வது நிமிடத்தில் ருதுஜா மீண்டும் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.