/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஒலிம்பிக் குத்துச்சண்டை: அங்குஷிதா வெற்றி
/
ஒலிம்பிக் குத்துச்சண்டை: அங்குஷிதா வெற்றி
ADDED : மே 27, 2024 10:51 PM

பாங்காக்: ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றில் இந்தியாவின் அங்குஷிதா வெற்றி பெற்றார்.
தாய்லாந்தில், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று நடக்கிறது. பெண்களுக்கான 60 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அங்குஷிதா போரோ, மங்கோலியாவின் நமூன் மங்கோர் மோதினர். அபாரமாக ஆடிய அங்குஷிதா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்களுக்கான 80 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அபிமன்யு லுாரா, 10 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற பல்கேரியாவின் கிறிஸ்டியன் நிகோலோவ் மோதினர். இதில் ஏமாற்றிய அபிமன்யு 0-5 என தோல்வியடைந்தார்.
இன்று நடக்கும் மற்ற எடைப்பிரிவு 2வது சுற்று போட்டிகளில் இந்தியாவின் சச்சின் சிவாச் (57 கிலோ), அபினாஷ் ஜாம்வால் (63.5), நிஷாந்த் தேவ் (71) பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம்.
இதுவரை இந்திய வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத்தி (54), லவ்லினா (75) பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

