உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 21, 2024 10:53 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மூவர்ணக் கொடியை சரத் கமல் ஏந்தி வர உள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் ஜூலை 26 முதல் ஆக. 11 வரை 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதன் துவக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி வரும் கவுரவம் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் அஜந்தா சரத் கமலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூவர்ணக் கொடி ஏந்தி வரும் இந்திய வீராங்கனை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு தலைவராக ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.
