sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சர்ச்சைகளை கடந்து * ஒலிம்பிக் கவுன்ட் டவுண்-20

சர்ச்சைகளை கடந்து * ஒலிம்பிக் கவுன்ட் டவுண்-20

சர்ச்சைகளை கடந்து * ஒலிம்பிக் கவுன்ட் டவுண்-20


ADDED : ஜூலை 06, 2024 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2024 11:08 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெக்சிகோவில், 19வது ஒலிம்பிக் போட்டி (1968, அக். 12-27) நடந்தது. மெக்சிகோ நகரம் கடல் மட்டத்தில் இருந்து 2,300 மீ., உயரமாக இருப்பதால் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு சிரமமாக இருக்குமென சர்ச்சைகள் கிளம்பின.

ஒலிம்பிக் துவக்க விழாவில், ஜோதி ஏற்றிய முதல் பெண் என்ற பெருமையை மெக்சிகோ தடகள வீராங்கனை நார்மா என்ரிகுயிட்டா பாசிலியோ பெற்றார். செக்குடியரசை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை வீர காஸ்லவ்ஸ்கா நான்கு தங்கம், இரண்டு வெள்ளி வென்று சாதனை படைத்தார்.

1968ல் செக்குடியரசு மீது ரஷ்யா படையெடுத்து ஆக்கிரமித்தது. இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க காஸ்லவ்ஸ்கா மூன்று வார காலம் தலைமறைவாக இருந்தார். தனிநபர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றார். பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 45 தங்கம், 28 வெள்ளி, 34 வெண்கலம் என 107 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்தது. மெக்சிகோவுக்கு (3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்) 15வது இடமே கிடைத்தது. ஹாக்கியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us