/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் புதுமை * வீரர்களை முந்திய வீராங்கனைகள் எண்ணிக்கை
/
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் புதுமை * வீரர்களை முந்திய வீராங்கனைகள் எண்ணிக்கை
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் புதுமை * வீரர்களை முந்திய வீராங்கனைகள் எண்ணிக்கை
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் புதுமை * வீரர்களை முந்திய வீராங்கனைகள் எண்ணிக்கை
ADDED : ஏப் 10, 2025 10:51 PM

புதுடில்லி: லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கூடுதலாக 28 பதக்க போட்டிகள் சேர்க்கப்பட்டன. முதன் முறையாக வீரர்களை விட, வீராங்கனைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் 2028, ஜூலை 14-30ல் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. பாரிஸ் (2024) ஒலிம்பிக்கை விட அதிகமாக 22 உட்பட மொத்தம் 28 பதக்க போட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக, மொத்தம் பங்கேற்கும் நட்சத்திரங்களில் வீரர்களை (5,543) விட, வீராங்கனைகள் (5,655) எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்கள் அணிகளும் களமிறங்க உள்ளன. மொத்தம் 351 பதக்க போட்டிகள் (பாரிசில் 329) சேர்க்கப்பட்டன. கிரிக்கெட், ஸ்குவாஷ் உட்பட 5 புதிய போட்டிகள் இடம் பெற உள்ளதால் கூடுதலாக 698 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவுக்கு எப்படி
குத்துச்சண்டையில் பெண்களுக்கு 7 பிரிவு இடம் பெற்றுள்ளது. இதனால் இந்தியா பதக்க வாய்ப்பு அதிகரிக்கும். கலப்பு இரட்டையரில் இம்முறை வில்வித்தை, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜூடோ, துப்பாக்கிசுடுதல், 4*100 மீ., தொடர் ஓட்டம் சேர்க்கப்பட்டன.
காம்பவுண்டு வில்வித்தையில் இந்திய கலப்பு அணி, கடந்த 7 உலக கோப்பை தொடரில் 3 தங்கம், 1 வெள்ளி வென்றது. இதில் இந்தியா பதக்கம் வெல்லலாம்.
டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையரில் ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்கம் வென்றதால், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இது தொடரலாம்.
கால்பந்தில் ஆண்களை (12) விட, 4 பெண்கள் அணிகள் (16) கூடுதலாக உள்ளன.
வருமா கிரிக்கெட் பதக்கம்
ஒலிம்பிக்கில் 128 ஆண்டுக்குப் பின் (கடைசியாக 1900ல பாரிஸ்), இம்முறை கிரிக்கெட் ('டி-20') சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்கள் (6), பெண்கள் (6) பிரிவில் மொத்தம் 12 அணிகளில் 180 பேர் பங்கேற்க உள்ளனர். தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் அமெரிக்கா தகுதி பெறும். மீதமுள்ள தலா 5 அணிகள், தரவரிசை அடிப்படையில் தேர்வாகலாம். இப்போது இந்தியாவின் இரு அணிகள் முதல் (ஆண்), மூன்றாவது (பெண்) இடத்தில் உள்ளன. இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு, கைகூட வாய்ப்புள்ளது.
2030ல் காமன்வெல்த்
இந்தியாவில் 2010க்குப் பின் மீண்டும் 2030ல் காமன்வெல்த் விளையாட்டு நடத்த இந்தியா முயற்சி நடக்கின்றன. இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா கூறுகையில்,'' கனடா, நைஜீரியா விருப்பம் தெரிவித்து இருந்தாலும், 2030ல் காமன்வெல்த் நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது,'' என்றார்.