sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

வில்வித்தை: தீபிகா குமாரி வெற்றி

/

வில்வித்தை: தீபிகா குமாரி வெற்றி

வில்வித்தை: தீபிகா குமாரி வெற்றி

வில்வித்தை: தீபிகா குமாரி வெற்றி


ADDED : ஜூலை 31, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: ஒலிம்பிக் வில்வித்தை பெண்கள் ஒற்றையரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி முன்னேறினார்.

ஒலிம்பிக்கில் தற்போது தனிநபர் வில்வித்தை போட்டி நடக்கின்றன. பெண்களுக்கான 'ரவுண்டு-32' போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, எஸ்தோனியாவின் ரீனா பர்னத்தை எதிர்கொண்டார்.

முதல் 4 செட் முடிவில் தீபிகா குமாரி 3-5 என பின் தங்கி இருந்தார். 5வது செட்டை தீபிகா குமாரி கைப்பற்ற போட்டி 5-5 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி 'ஷூட் ஆப்' முறைக்கு சென்றது. இதில் தீபிகா குமாரி 9, ரீனா 8 புள்ளி எடுத்தனர். முடிவில் தீபிகா குமாரி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் ('ரவுண்டு-16') தீபிகா குமாரி, நெதர்லாந்தின் குயின்டி ராபெனை சந்தித்தார். முதல் செட்டை 2-0 (29-28) என கைப்பற்றிய இவர், அடுத்த செட்டை 27-29 என இழக்க, ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. பின் சுதாரித்துக் கொண்ட இவர், 3, 4வது செட்டை 25-17, 28-23 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ('ரவுண்டு-16') முன்னேறினார். இதில் ஜெர்மனியின் மிட்செல்லியை (ஆக. 3) சந்திக்க உள்ளார்.

தருண்தீப் ஏமாற்றம்

ஆண்களுக்கான முதல் சுற்று ('ரவுண்டு-32') போட்டியில் இந்தியாவின் தருண்தீப் ராய், பிரிட்டனின் டாம் ஹாலை எதிர்கொண்டார். நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற தருண்தீப் ராய், முதல் செட்டை சமன் செய்தார். அடுத்த செட்டை இழக்க 1-3 என பின்தங்கினார். பின் மூன்றாவது செட்டை கைப்பற்ற போட்டி 3-3 என சமன் ஆனது.

நான்காவது செட்டை ஒரு புள்ளி வித்தியாசத்தில் கோட்டை விட்டார். தொடர்ந்து ஐந்தாவது செட்டில் போராடிய போதும் சமன் தான் செய்ய முடிந்தது. முடிவில் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.






      Dinamalar
      Follow us