/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா * பாரிஸ் ஒலிம்பிக்கில் அபாரம்
/
பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா * பாரிஸ் ஒலிம்பிக்கில் அபாரம்
பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா * பாரிஸ் ஒலிம்பிக்கில் அபாரம்
பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா * பாரிஸ் ஒலிம்பிக்கில் அபாரம்
ADDED : ஆக 06, 2024 03:42 PM

பாரிஸ்: ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
பிரான்சின் பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் இன்று ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று நடந்தது. இந்தியா சார்பில் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா உட்பட இருவருடன் சேர்த்து மொத்தம் 32 பேர் களமிறங்குகின்றனர். குறைந்தது 85 மீ., துாரம் எறிந்தால் மட்டுமே பைனலுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், தகுதிச்சுற்றில் 'பி' பிரிவில் களமிறங்கினார் நீரஜ் சோப்ரா.
ஒவ்வொரு வீரருக்கும் தலா 3 வாய்ப்பு தரப்பட்டன. முதல் வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட நீரஜ் சோப்ரா 89.34 மீ., துாரம் எறிந்தார். இந்த சீசனில் இவர் எறிந்த சிறந்த துாரமாக இது அமைந்தது. இதையடுத்து ஒரே வாய்ப்பில் பைனலுக்கு முன்னேறி அசத்தினார் நீரஜ் சோப்ரா.
தவிர தகுதிச்சுற்றில் இவரது சிறப்பான துாரமாகவும் இது அமைந்தது.
* ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் (2021, டோக்கியோ) வென்று தந்த நீரஜ் சோப்ரா, அடுத்து பைனலிலும் (ஆக. 8) அசத்த காத்திருக்கிறார்.
தகுதிச்சுற்று 'ஏ' பிரிவில் களமிறங்கினார் மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா. ஆசிய விளையாட்டில் 87.54 மீ., துாரம் எறிந்த இவர், நேற்று முதல் வாய்ப்பில் 80.73 மீ., துாரம் எறிந்தார். இரண்டாவது வாய்ப்பு பவுல் ஆனது. மூன்றாவது, கடைசி வாய்ப்பில் 80.21 மீ., துாரம் மட்டும் எறிய, பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
* ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் (87.76 மீ.,), டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற செக் குடியரசின் ஜாகுப் வாடில்ச் (85.63 மீ.,), உள்ளிட்டோரும் பைனலுக்கு முன்னேறினர்.