/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஒலிம்பிக்கில் 'டாப்-5' இடம் * விளையாட்டு அமைச்சர் விருப்பம்
/
ஒலிம்பிக்கில் 'டாப்-5' இடம் * விளையாட்டு அமைச்சர் விருப்பம்
ஒலிம்பிக்கில் 'டாப்-5' இடம் * விளையாட்டு அமைச்சர் விருப்பம்
ஒலிம்பிக்கில் 'டாப்-5' இடம் * விளையாட்டு அமைச்சர் விருப்பம்
ADDED : அக் 04, 2024 11:09 PM

புதுடில்லி: ''ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா 'டாப்-5' இடத்துக்குள் வர வேண்டும்,'' என மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் குவாலியரில் நடந்த தேசிய உடற்கல்வி மையத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா பங்கேற்றார். அப்போது அவர் கூறியது:
இந்தியாவுக்கு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்புகள், பயிற்சி வசதிகள் தேவைப்படுகின்றன. இவை சரியாக அமைந்தால் உலகளவில் சாதிக்க முடியும். வரும் 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். அப்போது பதக்க பட்டியலில் இந்தியா 'டாப்-10' இடத்துக்குள் வர வேண்டும்.
அடுத்து 2047ல் இந்தியா தனது 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும். அப்போது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அதிக பதக்கம் வென்று, பட்டியலில் 'டாப்-5' இடம் பிடிக்க வேண்டும். பயிற்சியாளர், 'எப்போதும் தேசத்திற்குத் தான் முதலிடம்,' என்ற மனநிலையுடன் செயல்பட வேண்டும். அடுத்த தலைமுறை நட்சத்திரங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். விளையாட்டு உலகில் முன்னணி நாடாக திகழ, தங்களால் முடிந்த, பங்களிப்பை தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

