தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வீரருக்கு ரூ. 4,171... நிர்வாகிக்கு ரூ. 25,026 * பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்க முடிவு

வீரருக்கு ரூ. 4,171... நிர்வாகிக்கு ரூ. 25,026 * பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்க முடிவு

வீரருக்கு ரூ. 4,171... நிர்வாகிக்கு ரூ. 25,026 * பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்க முடிவு


ADDED : ஜூன் 25, 2024 10:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2024 10:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை விட, உடன் செல்லும் நிர்வாகிகளுக்கு ஐந்து மடங்கு அதிக பணம் வழங்கப்பட உள்ளது.

பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11ல் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள், உடன் செல்லும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் பணம் குறித்த விபரம் வெளியானது. இதன் படி, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ரூ. 2 லட்சம் தரப்படுகிறது. பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் கிடைக்கும்.

போட்டி நாட்களில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கும் வீரர், வீராங்கனைகள் செலவுகளுக்கு தினப்படியாக, 2021 டோக்கியோ ஒலிம்பிக் போல, ரூ. 4,171 மட்டும் பெறுவர். இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

அதேநேரம் வீரர், வீராங்கனைகளுடன் செல்லும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஒலிம்பிக் கிராமத்தில் 5 நாள் தங்குவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 90,000 வழங்கப்படும். இத்துடன் நாள் ஒன்றுக்கு தினப்படியா ரூ. 25,026 தரப்பட உள்ளது. இது டோக்கியோ ஒலிம்பிக்கில் (ரூ. 12,513), தரப்பட்டதை விட இரு மடங்கு அதிகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us