/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மீண்டும் அசத்துவாரா நீரஜ் சோப்ரா * ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு
/
மீண்டும் அசத்துவாரா நீரஜ் சோப்ரா * ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு
மீண்டும் அசத்துவாரா நீரஜ் சோப்ரா * ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு
மீண்டும் அசத்துவாரா நீரஜ் சோப்ரா * ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 05, 2024 11:43 PM

பாரிஸ்: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் மீண்டும் அசத்த காத்திருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
ஒலிம்பிக்கில் தடகளத்தில் இன்று, ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று நடக்கிறது. இந்தியா சார்பில் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா உட்பட இருவருடன் சேர்த்து மொத்தம் 32 பேர் களமிறங்குகின்றனர்.
நீரஜ் நம்பிக்கை
ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் (2021, டோக்கியோ) வென்று தந்தவர் நீரஜ் சோப்ரா. இன்றைய தகுதிச்சுற்றில் அசத்தினால் பைனலுக்கு (ஆக. 8) முன்னேறலாம்.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் வரலாற்றில், இதுவரையில் எரிக் லெம்மிங் (சுவீடன், 1908-12), ஜான்னி மைரா (பின்லாந்து, 1920-24), ஜான் ஜெலெஸ்னி (செக் குடியரசு, 1992-96, 2000), ஆன்ட்ரியாஸ் (நார்வே, 2008-08) என நான்கு வீரர்கள் மட்டும் தங்கப்பதக்கத்தை அடுத்தடுத்த தொடரில் தக்க வைத்துள்ளனர்.
நீரஜ் சோப்ரா பைனலுக்கு முன்னேறினால், தொடர்ந்து இரு தங்கம் வென்ற முதல் இந்தியர், சர்வதேச அளவில் ஐந்தாவது ஈட்டி எறிதல் வீரர் ஆக முயற்சிக்கலாம்.
தயாரானது எப்படி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பின் பங்கேற்ற 15 சர்வதேச தொடரில், இரு முறை மட்டும் தான் 85 மீ.,க்கும் குறைவான துாரத்தில் ஈட்டி எறிந்தார். மற்ற அனைத்திலும் 85 மீ., க்கும் அதிகமாக எறிந்துள்ளார்.
இந்த ஆண்டு மூன்று தொடரில் மட்டும் பங்கேற்றாலும், ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன், ஆசிய சாம்பியனாக களமிறங்கும் நீரஜ் சோப்ரா, முழு உடற்தகுதியுடன் இருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காத்திருக்கும் சவால்
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற செக் குடியரசின் ஜாகுப் வாடில்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர், முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோர் மீண்டும் நீரஜ் சோப்ராவுக்கு சவால் தர முயற்சிக்கலாம்.
கிஷோர் போட்டி
மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனாவும், இன்று பைனலுக்கு முன்னேற காத்திருக்கிறார். ஆசிய விளையாட்டில் 87.54 மீ., துாரம் எறிந்து நீரஜ் சோப்ராவுக்கு சவால் கொடுத்தது போல, மீண்டும் மிரட்டினால், இந்தியாவின் இரு வீரர்களும் பைனலுக்கு முன்னேறுவது உறுதி.