/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: அரையிறுதி நோக்கி இந்தியா * இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை
/
ஹாக்கி: அரையிறுதி நோக்கி இந்தியா * இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை
ஹாக்கி: அரையிறுதி நோக்கி இந்தியா * இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை
ஹாக்கி: அரையிறுதி நோக்கி இந்தியா * இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை
ADDED : ஆக 03, 2024 11:27 PM

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி இன்று, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வென்று அரையிறுதிக்கு முன்னேற காத்திருக்கிறது.
ஒலிம்பிக் ஹாக்கியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் முதலில் லீக் முறையில் நடந்தன. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, நியூசிலாந்தை வென்றது. அர்ஜென்டினாவுடன் 'டிரா' செய்தது. அயர்லாந்தை வென்ற இந்தியா, பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. ஆஸ்திரேலியாவை 3-2 என சாய்த்தது. இந்தியா, 10 புள்ளியுடன் 2வது இடம் பிடித்து, காலிறுதிக்கு முன்னேறியது.
இதில் 'ஏ' பிரிவில் மூன்றாவது இடம் பெற்ற இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் மத்திய களத்தில் மன்பிரீத் சிங், துணைக் கேப்டன் ஹர்திக் சிங், முன்களத்தில் குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங் என பலரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். முதல் பாதியில் தாக்குதல் பாணியில் விளையாடியது பலன் தந்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், இதுவரை 6 கோல் அடித்தது கூடுதல் தன்னம்பிக்கை தந்துள்ளது. கடந்த இரு போட்டியில் தலா ஒரு பீல்டு கோல் அடித்து மிரட்டிய அபிஷேக், தற்காப்பு வீரர்கள் அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங் உள்ளிட்டோர் நம்பிக்கை தருகின்றனர்.
தனது கடைசி தொடரில் பங்கேற்கும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், சுவராக நின்று, எதிரணி கோல் வாய்ப்புகளை தடுத்து வருகிறார்.
இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தால், அரையிறுதிக்கு முன்னேறி அசத்தலாம்.