sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

மல்யுத்தம்: ரீத்திகா ஏமாற்றம்

/

மல்யுத்தம்: ரீத்திகா ஏமாற்றம்

மல்யுத்தம்: ரீத்திகா ஏமாற்றம்

மல்யுத்தம்: ரீத்திகா ஏமாற்றம்


UPDATED : ஆக 10, 2024 11:40 PM

ADDED : ஆக 10, 2024 11:05 PM

Google News

UPDATED : ஆக 10, 2024 11:40 PM ADDED : ஆக 10, 2024 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பாரிஸ்ஒலிம்பிக்மல்யுத்தபோட்டி காலிறுதியில் இந்தியாவின் ரீத்திகா தோல்வியடைந்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டி நடந்தன. இதில் 76 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் 21 வயது வீராங்கனை ரீத்திகா ஹூடா பங்கேற்றார். இதையடுத்து ஒலிம்பிக் மல்யுத்தம் 'ஹெவிவெயிட்' பிரிவில் பங்கேற்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார்.

காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ரீத்திகா, ஹங்கேரியின் பெர்னாடெட் நாகியை எதிர்கொண்டார். தலா 3 நிமிடம் கொண்ட முதல் 'பீரியடு' முடிவில் ரீத்திகா 4-2 என முந்தினார்.

தொடர்ந்து இரண்டாவது 'பீரியடிலும்' அசத்திய ரீத்திகா அடுத்தடுத்து 8 புள்ளி எடுக்க, ஸ்கோர் 12-2 என ஆனது. எதிரணி வீராங்கனையின் ஸ்கோரை விட 10 புள்ளி அதிகமாக இருந்ததால், போட்டி முடிய 29 வினாடி இருந்த போது ஆட்டத்தை நிறுத்தினார் நடுவர். ரீத்திகா வெற்றி பெற்றதாக அறிவிக்க, காலிறுதிக்கு முன்னேறினார்.

இதில் கஜகஸ்தானின் ஐபெரியை எதிர்கொண்டார். இருவரும் சம பலத்தில் மோதினர். முடிவில் போட்டி 1-1 என முடிந்தது.

இருப்பினும் கடைசியாக புள்ளி எடுத்தவருக்கு வெற்றி என்ற விதிப்படி, ஐபெரி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அடுத்து ஐபெரி பைனலுக்குள் நுழைந்தால், ரீத்திகா வெண்கல பதக்கத்துக்கான 'ரெப்பிசாஜ்' போட்டியில் பங்கேற்கலாம்என்ற நிலை இருந்தது. ஆனால் ஐபெரி அரையிறுதியில் தோற்றதால், ரீத்திகா பதக்க வாய்ப்பு முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us