தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வினேஷ் அப்பீல்... தீர்ப்பு தள்ளிவைப்பு

வினேஷ் அப்பீல்... தீர்ப்பு தள்ளிவைப்பு

வினேஷ் அப்பீல்... தீர்ப்பு தள்ளிவைப்பு


ADDED : ஆக 10, 2024 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 10:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பான அப்பீல் மனு மீதான தீர்ப்பு, தள்ளிவைக்கப்பட்டது.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 29. பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரீஸ்டைல், 50 கிலோ பிரிவில் அசத்திய இவர், ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார்.

பைனலுக்கு முன் நடந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்டதை (50 கிலோ) விட, 100 கிராம் கூடுதலாக இருந்ததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். சர்வதேச மல்யுத்த விதிமுறைப்படி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த விரக்தியில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இருப்பினும், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், மல்யுத்த கூட்டமைப்பின் முடிவை எதிர்த்து, சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்.,) வினேஷ் போகத் அப்பீல் செய்தார். இதில்,'பைனலுக்கு முன் தகுதி நீக்கம் செய்ததால், எனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும்,' என தெரிவித்து இருந்தார்.

இவருக்கு ஆதரவாக இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடினார். ஒலிம்பிக் முடிவதற்கு முன் (இன்று), முதற்கட்ட தீர்ப்பு நேற்று இரவு வழங்கப்பட இருந்தது. ஆனால் திடீரென தீர்ப்பு வரும் 13க்கு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கான காரணம் பின்னர் வெளியிடப்படும் என சி.ஏ.எஸ்., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us