/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வினேஷ் போகத் கோரிக்கை நிராகரிப்பு
/
வினேஷ் போகத் கோரிக்கை நிராகரிப்பு
ADDED : ஆக 14, 2024 10:29 PM

புதுடில்லி: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 29. பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ பிரிவின் பைனலுக்கு முன்னேறினார். அப்போது நடந்த சோதனையில், 50 கிலோவை விட, 100 கிராம் கூடுதலாக இருந்ததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த விரக்தியில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
சர்வதேச ஒலிம்பிக், சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு முடிவை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்.,) வினேஷ் போகத் அப்பீல் செய்தார். தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கான தீர்ப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்ட செய்தியில்,' வினேஷ் போகத்தின் கோரிக்கையை சி.ஏ.எஸ்., நிராகரித்து விட்டது,' என தெரிவித்துள்ளது.
ஐ.ஒ.ஏ., தலைவர் பி.டி.உஷா கூறுகையில்,'' தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்ற வினேஷ் போகத் கோரிக்கையை சி.ஏ.எஸ்., நிராகரித்தது அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது,'' என்றார்.