/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவின் சாம்பியன் வினேஷ் * விளையாட்டு உலகம் பாராட்டு
/
இந்தியாவின் சாம்பியன் வினேஷ் * விளையாட்டு உலகம் பாராட்டு
இந்தியாவின் சாம்பியன் வினேஷ் * விளையாட்டு உலகம் பாராட்டு
இந்தியாவின் சாம்பியன் வினேஷ் * விளையாட்டு உலகம் பாராட்டு
ADDED : ஆக 15, 2024 10:42 PM

புதுடில்லி: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 29. பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ பிரிவின் பைனலுக்கு முன்னேறினார். அப்போது நடந்த சோதனையில், 50 கிலோவை விட, 100 கிராம் கூடுதலாக இருந்ததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த விரக்தியில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
சர்வதேச ஒலிம்பிக், சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு முடிவை எதிர்த்த வினேஷ் போகத், 'தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும்,' என சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்.,) அப்பீல் செய்தார். இதுகுறித்து விசாரணை முடிந்த போதும், மூன்று முறை தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
கடைசியில், வினேஷ் போகத் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறுகையில்,'' எடை சர்ச்சை காரணமாக உங்கள் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 'உலகம் முழுவதும் வைரமாக ஜொலிக்கிறீர்கள். உலக சாம்பியனான உங்களால் இந்தியா பெருமைப்படுகிறது. நீங்கள் இந்தியாவின் கோகினுார் வைரம்,'' என்றார்.
ஓய்வு பெற்ற ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் கூறுகையில்,'' வினேஷ் போகத்துக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஏமாற்றம் தருகிறது. ஆனால் இவ்விஷயத்தில் நாம் எதுவும் செய்ய முடியாது,'' என்றார்.
ஹாக்கி வீரர் ஜர்மன்பிரீத் சிங் கூறுகையில்,''விளையாட்டு நட்சத்திரங்கள் கடினமாக போராடுகின்றனர். ஒருசில நேரங்களில் யாராவது ஒருவருக்கு இப்படி நடக்கும் போது, மனம் காயப்படுகிறது,'' என்றார்.
மற்றொரு வீரர் அமித் ரோஹிதாஸ் கூறுகையில்,'' வினேஷ் போகத் பின்னால் ஒட்டுமொத்த இந்தியாவும் நிற்கிறது. இவர், தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். ஏனெனில் அவர் நம்முடைய சாம்பியன், தேசத்தின் சாம்பியன்,'' என்றார்.