தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஒலிம்பிக்: நிராஜ் குமார் தகுதி: உலக துப்பாக்கி சுடுதலில் ‘வெண்கலம்’

ஒலிம்பிக்: நிராஜ் குமார் தகுதி: உலக துப்பாக்கி சுடுதலில் ‘வெண்கலம்’

ஒலிம்பிக்: நிராஜ் குமார் தகுதி: உலக துப்பாக்கி சுடுதலில் ‘வெண்கலம்’


ADDED : நவ 11, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 07:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோஹா: உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்தியாவின் நிராஜ் குமார், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

கத்தார் தலைநகர் தோஹாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (‘ரைபிள்’ / ‘பிஸ்டல்’ / ‘ஷாட்கன்’) தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 50 மீ., ‘ரைபிள்–3 பொசிசன்ஸ்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் நிராஜ் குமார் (591.29 புள்ளி), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (586.27) முறையே 1, 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.

அடுத்து நடந்த பைனலில், 346.5 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த நிராஜ் குமார் வெண்கலம் வென்றார். தவிர இவர், வரும் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்தார். இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 2வது இந்தியரானார். ஏற்கனவே, இத்தொடரில் வெள்ளி வென்ற இந்திய வீரர் ஜெய்பால் மால்வியா (10 மீ., ‘ஏர் பிஸ்டல்’) தகுதி பெற்றிருந்தார்.

மற்றொரு இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (323.7 புள்ளி) 5வது இடம் பிடித்தார்.

இத்தொடரில் 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என, 10 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் சீனா (13 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம்) நீடிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us