/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பங்கஜ் அத்வானி 'தங்கம்': ஆசிய ஸ்னுாக்கரில் அசத்தல்
/
பங்கஜ் அத்வானி 'தங்கம்': ஆசிய ஸ்னுாக்கரில் அசத்தல்
பங்கஜ் அத்வானி 'தங்கம்': ஆசிய ஸ்னுாக்கரில் அசத்தல்
பங்கஜ் அத்வானி 'தங்கம்': ஆசிய ஸ்னுாக்கரில் அசத்தல்
ADDED : பிப் 20, 2025 08:58 PM

தோகா: ஆசிய ஸ்னுாக்கரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி தங்கம் வென்றார்.
கத்தார் தலைநகர் தோகாவில், ஆசிய ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, ஈரானின் அமிர் சர்கோஷ் மோதினர். அபாரமாக விளையாடிய பங்கஜ் அத்வானி 4-1 (42-72, 93-17, 93-1, 89-21, 70-41) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
சமீபத்தில் இந்துாரில் நடந்த தேசிய ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பை வென்ற பங்கஜ் அத்வானி, ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் தனது 14வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதுவரை 5 ஆசிய ஸ்னுாக்கர் (2016, 2017, 2019, 2021, 2025), 9 ஆசிய பில்லியர்ட்ஸ் (2005, 2008, 2009, 2010, 2012, 2017, 2018, 2022, 2023) தொடரில் தங்கம் வென்றுள்ளார். தவிர இவர், ஆசிய விளையாட்டில் இரண்டு முறை (2006, 2010) தங்கத்தை தட்டிச் சென்றார்.
இங்கிலாந்தில், வரும் ஏப். 19-மே 5ல் நடக்கவுள்ள உலக ஸ்னுாக்கரில் பங்கஜ் அத்வானி கோப்பை வெல்லும் பட்சத்தில், ஒரே ஆண்டில் தேசிய, ஆசிய, உலக ஸ்னுாக்கர் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனை படைக்கலாம்.

