தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பாரா வில்வித்தை: ராகேஷ் 'தங்கம்'

பாரா வில்வித்தை: ராகேஷ் 'தங்கம்'

பாரா வில்வித்தை: ராகேஷ் 'தங்கம்'


ADDED : ஜூன் 01, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2025 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரோம்: பாரா வில்வித்தையில் இந்தியாவின் ராகேஷ் தங்கம் வென்றார்.

இத்தாலி தலைநகர் ரோமில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஐரோப்பிய பாரா வில்வித்தை கோப்பை தொடர் நடந்தது. ஆண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்தியாவின் ராகேஷ் குமார், பிரிட்டனின் நாதன் மெக்குயின் மோதினர். அபாரமாக ஆடிய ராகேஷ் 145-142 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இத்தொடரில் இவரது 2வது தங்கம். ஏற்கனவே, காம்பவுண்டு அணிகள் பிரிவிலும் தங்கம் வென்றிருந்தார்.

ஆண்களுக்கான தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்தியாவின் தன்னா ராம் கோதாரா, பிரிட்டனின் கேமிரான் ரேடிகன் மோதினர். இதில் அசத்திய தன்னா ராம் 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

இத்தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என, 8 பதக்கம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us