/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'பாரா' தடகளம்: பிரவீன் பங்கேற்பு
/
'பாரா' தடகளம்: பிரவீன் பங்கேற்பு
ADDED : மார் 07, 2025 09:55 PM

புதுடில்லி: உலக 'பாரா' தடகளத்தில் இந்தியாவின் பிரவீன் குமார், நவ்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
டில்லியில், வரும் மார்ச் 11-13ல் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நடக்க உள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்படும் இத்தொடரில், 20 நாடுகளை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட 'பாரா' விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியா சார்பில், பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் (உயரம் தாண்டுதல், 'டி64'), நவ்தீப் சிங் (ஈட்டி எறிதல், 'எப்41'), தரம்பிர் ('கிளப் த்ரோ', 'எப்51') உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். சமீபத்தில் துபாயில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் இந்தியாவுக்கு 14 பதக்கம் (5 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம்) கிடைத்தது. இம்முறை சொந்த மண்ணில் இந்திய நட்சத்திரங்கள் சாதிப்பர் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
பிரவீன் குமார் கூறுகையில், ''சொந்த மண்ணில், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட இருப்பது சிறப்பு. இத்தொடர் மூலம் இந்தியாவில், 'பாரா' விளையாட்டு பிரபலமடையும். ரசிகர்களின் ஆதரவோடு சாதிக்க காத்திருக்கிறேன்,'' என்றார்.
தரம்பிர் கூறுகையில், ''சொந்த மண்ணில் உலக 'பாரா' தடகளம் நடக்க இருப்பது இந்திய நட்சத்திரங்களுக்கு வரலாற்று தருணம். நீண்ட நாள் கனவு நிறைவேறியது. சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு பெருமை தேடித்தர முயற்சிப்பேன்,'' என்றார்.