ADDED : மே 31, 2025 09:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரோம்: இத்தாலி தலைநகர் ரோமில் பாரா வில்வித்தை கோப்பை போட்டி நடந்தது. ஆண்களுக்கான காம்பவுண்டு ஓபன் அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் ராகேஷ் குமார், ஷ்யாம் சுந்தர் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜோனாதன், கேரி ராபின்சன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 154-153 என 'திரில்' வெற்றி பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
'ரீகர்வ்' ஆண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் தன்னா ராம், விவேக் ஜோடி 0-6 என தென் கொரியாவின் ஜியோன்வி, ஜிஹூன் ஜோடியிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
'ரீகர்வ்' கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் பூஜா, தன்னா ராம் ஜோடி 0-6 என பிரிட்டனின் ஹெலன், கேமரான் ஜோடியிடம் தோற்று, வெள்ளி வசப்படுத்தியது.