தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பாராலிம்பிக் கோலாகல துவக்கம் * இந்திய நட்சத்திரங்கள் உற்சாகம்

பாராலிம்பிக் கோலாகல துவக்கம் * இந்திய நட்சத்திரங்கள் உற்சாகம்

பாராலிம்பிக் கோலாகல துவக்கம் * இந்திய நட்சத்திரங்கள் உற்சாகம்


ADDED : ஆக 29, 2024 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2024 01:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரிஸ்: பாராலிம்பிக் போட்டி பாரிசில் நேற்று கோலாகலமாகத் துவங்கியது. அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை சுமித் அன்டில், பாக்யஸ்ரீ ஜாதவ் ஏந்தி வந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நேற்று துவங்கியது. -செப். 8ல் வரை நடக்கும் இதில் 169 நாடுகளை சேர்ந்த 4,400 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 520க்கும் மேற்பட்ட பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தியா சார்பில் 84 பேர், 12 வகையான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். நேற்று இதற்கான துவக்கவிழா பிரான்சின் மையப்பகுதியில் உள்ள பிளேஸ் டி லா கான்கார்ட் சதுக்கத்தில் நடந்தது.

ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக திறந்தவெளி பகுதியில் (சென் நதி) சமீபத்தில் துவக்க விழா நடந்தது. இதுபோல, பாராலிம்பிக் வரலாற்றில் மைதானத்தில் அல்லாமல், முதல் முறையாக நேற்று திறந்தவெளியில் விழா நடந்தது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், போட்டியை முறைப்படி துவக்கி வைத்தார். கனடா பியானோ இசைக்கலைஞர் சில்லி கொன்ஜாலஸ், கலை நிகழ்ச்சிகளை துவக்கினார். 140 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். பிரான்ஸ் பாராலிம்பிக் நீச்சல் வீரர் தியோ கரின், ஸ்பெஷலாக அலங்கரிக்கப்பட்ட டாக்சியில் அழைத்து வரப்பட்டார்.

வானில் விமானங்கள் பிரான்ஸ் மூவர்ணக்கொடி நிறத்தை துாவிச் சென்றன. பாராலிம்பிக் சின்னம் 'பிரிஜஸ்' சதுக்கத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதன் பின் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு துவங்கியது.

முதலில் ஆப்கானிஸ்தான் அணி வந்தது. அடுத்து தென் ஆப்ரிக்கா, அல்ஜீரியா, ஜெர்மனி என அடுத்தடுத்து அணிகள் வந்தன. அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை சுமித் அன்டில், பாக்யஸ்ரீ ஜாதவ் ஏந்தி வந்தனர். இந்திய நட்சத்திரங்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

நிறைவாக பாராலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் அரங்கேறின. மொத்தம் 65,000 பேர் அமர்ந்து துவக்கவிழா நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,' பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்கும் எங்கள் அணி சிறப்பாக செயல்பட, 140 கோடி இந்தியர்கள் வாழ்த்துகிறோம். ஒவ்வொரு விளையாட்டு நட்சத்திரங்களின் தைரியம், மன உறுதி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஊக்கமாக அமையும்,'' என்றார்.

வில்வித்தையில் சாதிக்குமா

பாராலிம்பிக் வில்வித்தையில் 1968 முதல் இந்தியா பங்கேற்கிறது. இதுவரை ஒரு பதக்கம் மட்டும் வென்றது. கடந்த 2021ல் ஹர்விந்தர் சிங் வெண்கலம் வென்றிருந்தார்.

இம்முறை காம்பவுண்டு பிரிவில் ஷீத்தல் தேவி, சரிதா, சுந்தர் சுவாமி, ராகேஷ் குமார் என நான்கு பேர், 'ரீகர்வ்' பிரிவில் ஹர்விந்தர் சிங், பூஜா ஜத்யன் என மொத்தம் 6 பேர் பங்கேற்கின்றனர். இன்று இரண்டு பிரிவிலும் தரவரிசை போட்டி நடக்கின்றன. இதில் சிறப்பாக செயல்பட்டால் இம்முறை கூடுதல் பதக்கம் வெல்லலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us