தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பவினா இரண்டு 'வெள்ளி' * உலக பாரா டேபிள் டென்னிசில்...

பவினா இரண்டு 'வெள்ளி' * உலக பாரா டேபிள் டென்னிசில்...

பவினா இரண்டு 'வெள்ளி' * உலக பாரா டேபிள் டென்னிசில்...


ADDED : மே 22, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தைபே சிட்டி: உலக பாரா டேபிள் டென்னிஸ், இரட்டையர் பிரிவில் பவினா படேல், இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

சீன தைபேவில் உலக பாரா எலைட் டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பவினா படேல், தென் கொரியாவின் மூன் சங்யே ஜோடி, அரையிறுதியில் 3-0 என (11-9, 11-7, 11-6) என ரஷ்யாவின் எலினா, நடெஜ்டா ஜோடியை வீழ்த்தியது. அடுத்து நடந்த பைனலில் பவினா ஜோடி, 2-3 என (3-11, 11-5, 6-11, 12-10, 10-12) தென் கொரியாவின் ஜங் யங், காங் ஜோடியிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பவினா படேல், ஷுபம் ஜோடி, அரையிறுதியில் 3-2 என (11-5, 8-11, 11-5, 7-11, 13-11) ரஷ்யாவின் ரசுல், எலினா ஜோடியை வென்றது.

பைனலில் 2-3 என (11-9, 11-9, 7-11, 5-11, 9-11) தென் கொரியாவின் பார்க் ஜின், ஜங் யங் ஜோடியிடம் தோற்று, வெள்ளிப்பதக்கம் பெற்றது.

கலப்பு இரட்டையர் மற்றொரு பிரிவு பைனலில் இந்தியாவின் விஜய தீபிகா, இந்தோனேஷியாவின் அஸ்டன் ஜோடி, 1-3 என (8-11, 2-11, 11-4, 9-11) தென் கொரியாவின் இயாங்ஜின், மூன் சங்யே ஜோடியிடம் தோற்க, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us