தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பருல் சவுத்ரி 2வது இடம்: 5000 மீ., ஓட்டத்தில்

பருல் சவுத்ரி 2வது இடம்: 5000 மீ., ஓட்டத்தில்

பருல் சவுத்ரி 2வது இடம்: 5000 மீ., ஓட்டத்தில்


ADDED : ஜூன் 14, 2026 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நைஸ்: சர்வதேச தடகள போட்டிக்கான 5000 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி 2வது இடம் பிடித்தார்.

பிரான்சின் நைஸ் நகரில், சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பருல் சவுத்ரி 31, பங்கேற்றார். இலக்கை 15 நிமிடம், 04.26 வினாடியில் கடந்த பருல், 2வது இடத்தை கைப்பற்றினார். ஆசிய விளையாட்டு (2022) 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற பருல், தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன் இவர், 2023ல் பந்தய துாரத்தை 15 நிமிடம், 10.35 வினாடியில் கடந்தது தேசிய சாதனையாக இருந்தது. தவிர இவர், ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற இந்திய தடகள கூட்டமைப்பு நிர்ணயித்தை நேரத்தைவிட (15 நிமிடம், 36.58 வினாடி) இலக்கை வேகமாக கடந்தார்.

முதலிடத்தை எத்தியோபியாவின் பெரேகா செனியா (15 நிமிடம், 03.85 வினாடி) கைப்பற்றினார். மூன்றாவது இடத்தை பிரான்சின் அலெசியா ஜார்போ (15 நிமிடம், 16.83 வினாடி) பிடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us