/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'போல்வால்ட்': சுவீடன் வீரர் சாதனை
/
'போல்வால்ட்': சுவீடன் வீரர் சாதனை
ADDED : ஏப் 20, 2024 10:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜியாமென்: டயமண்ட் லீக் தடகளத்தின் 'போல்வால்ட்' போட்டியில் சுவீடன் வீரர் அர்மன்ட் டுப்லாண்டிஸ் உலக சாதனை படைத்தார்.
சீனாவில் டயமண்ட் லீக் தடகள போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான 'போல்வால்ட்' போட்டியில் சுவீடனின் அர்மன்ட் டுப்லாண்டிஸ் 24, பங்கேற்றார். அதிகபட்சமாக 6.24 மீ., தாண்டிய இவர், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் இவர், தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் அதிகபட்சமாக 6.23 மீ., தாண்டிய இவர் உலக சாதனை படைத்திருந்தார்.

