பிரக்ஞானந்தா 6வது 'டிரா': சூப்பர் செஸ் கிளாசிக் தொடரில்
பிரக்ஞானந்தா 6வது 'டிரா': சூப்பர் செஸ் கிளாசிக் தொடரில்
ADDED : மே 23, 2026 10:05 PM

புக்காரெஸ்ட்: 'சூப்பர் செஸ் கிளாசிக்' தொடரில் 6வது 'டிரா' செய்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 6 தொடர்களாக நடக்கிறது. இதன் 2வது தொடரான 'சூப்பர் செஸ் கிளாசிக்', ருமேனியாவின் புக்காரெஸ்ட் நகரில் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் சின்டாரோவ் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் 8வது சுற்றில் பிரக்ஞானந்தா (வெள்ளை), பிரான்சின் மேக்சிம் வாசியர்-லாக்ரேவ் (கருப்பு) மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 139வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இது, இம்முறை பிரக்ஞானந்தாவின் 6வது 'டிரா'.
அமெரிக்காவின் பேபியானோ காருணா (வெள்ளை), ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் (கருப்பு) மோதிய போட்டி 48வது நகரத்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்டாரோவ் வெற்றி பெற்றர். நெதர்லாந்தின் அனிஷ் கிரி தோல்வியடைந்தார்.
எட்டு சுற்றுகளின் முடிவில், சின்டாரோவ் 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்த ஐந்து இடங்களில் தலா 4.0 புள்ளிகளுடன் பேபியானோ காருணா, வின்சென்ட் கீமர், பிரக்ஞானந்தா, அனிஷ் கிரி, வாசியர்-லாக்ரேவ் உள்ளனர்.
