/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அர்ஜுனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா: மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில்
/
அர்ஜுனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா: மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில்
அர்ஜுனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா: மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில்
அர்ஜுனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா: மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில்
ADDED : ஜன 21, 2025 10:02 PM

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் 3வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, சகவீரர் அர்ஜுனை வீழ்த்தினார்.
நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் 87வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் காருணா உள்ளிட்ட 14 பேர் பங்கேற்கின்றனர்.
மூன்றாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 60வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு 3வது சுற்றில் 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் பேபியானா காருணா மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 24வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, லியோன் லுாக் மென்டோன்கா மோதிய மற்றொரு 3வது சுற்றுப் போட்டி 44வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ரஷ்யாவின் விளாடிமிர் பெடோசீவ் மோதிய 3வது சுற்றுப் போட்டியும் 'டிரா'வில் முடிந்தது.
மூன்று சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். காருணா, குகேஷ், ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் தலா 2.0 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளனர். மற்ற இந்திய வீரர்களான ஹரிகிருஷ்ணா (1.5 புள்ளி) 6வது, மென்டோன்கா, அர்ஜுன் தலா 0.5 புள்ளிகளுடன் 13வது இடத்தில் உள்ளனர்.