தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பிராகு செஸ்: திவ்யா அபாரம்

பிராகு செஸ்: திவ்யா அபாரம்

பிராகு செஸ்: திவ்யா அபாரம்


ADDED : மார் 02, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிராகு: பிராகு செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் வெற்றி பெற்றார் திவ்யா.

செக்குடியரசில், பிராகு செஸ் தொடர் நடக்கிறது. உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா, சாலஞ்சர் பிரிவில் பங்கேற்கிறார். ஐந்தாவது சுற்றில் சக வீரர் சூர்ய சேகர் கங்குலியை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, 19வது நகர்த்தலில் முன்னிலை பெற்றார். தொடர்ந்து அசத்திய இவர், 35வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். திவ்யா, 2.5 புள்ளியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

குகேஷ் ஏமாற்றம்: மாஸ்டர்ஸ் பிரிவில், 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், 'நடப்பு சாம்பியன்' இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் விளையாடினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய கு குகேஷ், 69 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், ஸ்பெயினின் டேவிட் ஆன்டனிடம் தோல்வியடைந்தார்.

ஐந்து சுற்று முடிவில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரெஸ்ட் (4.0 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். நாடிர்பெக், செக் குடியரசின் டேவிட் நவரா, அடுத்த இரு இடங்களில் (தலா 3.5 புள்ளி) உள்ளனர். குகேஷ் 8 (1.5), அரவிந்த் 10 (1.5) இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

குகேஷ் 'நம்பர்-16'

சர்வதேச செஸ் தரவரிசை வெளியானது. ஓபன் பிரிவில் ஒரு இடம் முன்னேறிய அர்ஜுன், 'நம்பர்-10' ஆக உள்ளார். பிரக்ஞானந்தா 13வது இடத்தில் தொடர்கிறார். பிராகு தொடரில் 2 போட்டியில் தோற்றதால் குகேஷ், 16வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us