தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பிராகு செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

பிராகு செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

பிராகு செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'


ADDED : பிப் 27, 2025 08:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 08:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிராகு: பிராகு செஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியை இந்தியாவின் பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார்.

செக்குடியரசில், பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். இதன் முதல் சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செக்குடியரசின் டேவிட் நவாரா மோதினர். இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். இப்போட்டி 66வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.

இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், செக்குடியரசின் தாய் டாய் வான் நுயென் மோதிய மற்றொரு முதல் சுற்றுப் போட்டி 76வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், சீனாவின் யி வெய் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கீமர், 55வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் சாமுவேல் ஷாங்க்லேண்ட், துருக்கியின் எடிஸ் குரேலை தோற்கடித்தார்.

முதல் சுற்றின் முடிவில் கீமர் (ஜெர்மனி), குரேல் (துருக்கி) தலா 1.0 புள்ளியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். பிரக்ஞானந்தா, அரவிந்த், அனிஷ் கிரி, நுயென் உள்ளிட்ட 6 பேர் தலா 0.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us