தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பிராகு செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

பிராகு செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

பிராகு செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'


ADDED : மார் 05, 2025 10:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2025 10:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிராகு: இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஷாங்க்லேண்ட் மோதிய பிராகு செஸ் தொடரின் 6வது சுற்றுப் போட்டி 'டிரா' ஆனது.

செக்குடியரசில், பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.

இதன் 6வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சாமுவேல் ஷாங்க்லேண்ட் மோதினர். பிரக்ஞானந்தா, கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 43வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் (வெள்ளை), வியட்நாமின் குவாங் லீம் லே (கறுப்பு) மோதிய மற்றொரு 6வது சுற்றுப் போட்டி 32வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.

நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் மோதிய போடியும் 'டிரா'வில் முடிந்தது. ஆறு சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் அரவிந்த், பிரக்ஞானந்தா தலா 4.0 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். சீனாவின் யி வெய், அனிஷ் கிரி (நெதர்லாந்து), கீமர் (ஜெர்மனி), குவாங் லீம் லே (வியட்நாம்) தலா 3.0 புள்ளிகளுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us