/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பிராகு செஸ்: பிரக்ஞானந்தா மீண்டும் வெற்றி
/
பிராகு செஸ்: பிரக்ஞானந்தா மீண்டும் வெற்றி
ADDED : மார் 02, 2025 08:30 PM

பிராகு: பிராகு மாஸ்டர்ஸ் செஸ் 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
செக்குடியரசில், பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். இதன் 4வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் மோதினர். இதில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 44வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இது, இத்தொடரில் இவரது 2வது வெற்றியானது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் சாமுவேல் ஷாங்க்லேண்ட் மோதினர். இதில் அரவிந்த் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். விறுவிறுப்பான இப்போட்டி 47வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது. செக்குடியரசின் டேவிட் நவாரா, சீனாவின் யி வெய்யை தோற்கடித்தார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி, துருக்கியின் எடிஸ் குரேல் மோதிய போட்டி 'டிரா' ஆனது.
நான்கு சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் அரவிந்த், பிரக்ஞானந்தா தலா 3.0 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். கீமர் (ஜெர்மனி), ஷாங்க்லேண்ட் (அமெரிக்கா), கிரி (நெதர்லாந்து), குவாங் லீம் லே (வியட்நாம்) தலா 2.0 புள்ளிகளுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.