தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பிராகு செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

பிராகு செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

பிராகு செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி


ADDED : மார் 03, 2024 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 10:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிராகு: பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 5வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, சகவீரர் விதித் சந்தோஷ் குஜ்ராத்தியை வென்றார்.

செக்குடியரசில் பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். இதன் 5வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 52வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் குகேஷ், செக்குடியரசின் டேவிட் நவரா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ் 61வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.

இதுவரை முடிந்த ஐந்து சுற்றுகளின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (4.0 புள்ளி), ஈரானின் பர்ஹாம் (3.5), ஹங்கேரியின் ரிச்சர்டு ராப்போர்ட் (3.0) முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இந்தியாவின் குகேஷ் (2.5 புள்ளி), பிரக்ஞானந்தா (2.5), விதித் சந்தோஷ் (2.0) முறையே 4, 6, 8வது இடங்களில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us