/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பிரனதி நாயக் 'வெண்கலம்': ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில்
/
பிரனதி நாயக் 'வெண்கலம்': ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில்
பிரனதி நாயக் 'வெண்கலம்': ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில்
பிரனதி நாயக் 'வெண்கலம்': ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில்
ADDED : பிப் 18, 2024 05:09 PM

கெய்ரோ: ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில் இந்திய வீராங்கனை பிரனதி நாயக் வெண்கலம் வென்றார்.
எகிப்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை நடந்தது. பெண்களுக்கான 'வால்ட்' பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் தீபா கர்மாகர் (13.449 புள்ளி), பிரனதி நாயக் (13.166) முறையே 3, 7வது இடம் பிடித்தனர்.
அடுத்து நடந்த பைனலில் பிரனதி நாயக் 13.616 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனையானார். ஏற்கனவே அருணா புத்தா ரெட்டி (2018, ஒரு வெண்கலம்), தீபா கர்மாகர் (2018, ஒரு தங்கம், ஒரு வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தனர்.
மற்றொரு இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் 13.383 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்தார். இவர் ரியோ ஒலிம்பிக்கில் (2016) 4வது இடம் பிடித்திருந்தார்.