UPDATED : மார் 12, 2024 10:43 PM
ADDED : மார் 12, 2024 10:42 PM

சோனிபட்: வில்வித்தை தகுதி போட்டியில் தேசிய சாதனை படைத்தார் பிரதமேஷ்.
ஹரியானாவில் உள்ள விளையாட்டு ஆணையத்தில் வில்வித்தை நட்சத்திரங்களுக்கான தேசிய தகுதி போட்டி நடக்கிறது. ஆண்கள் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இளம் வீரர் பிரதமேஷ் 22, களமிறங்கினார். இவர் 714+715 என மொத்தம் 1429 புள்ளி எடுத்தார். இது புதிய தேசிய சாதனையாக அமைந்தது.
உலக வில்வித்தை, சர்வதேச வில்வித்தை கூட்டமைப்பு இத்தொடருக்கு அங்கீகாரம் தரவில்லை என்பதால், இது உலக சாதனையாக கணக்கில் கொள்ளப்படவில்லை.
பிரதமேஷ் வெளியிட்ட செய்தியில்,' உலக அங்கீகாரம் இல்லை என்பதால், உலக சாதனை வாய்ப்பு பறிபோனது துரதிருஷ்டவசமானது. சிறப்பாக செயல்பட உதவிய பயிற்சியாளர், ஆலோசகருக்கு நன்றி. புதிய சீசனை வெற்றிகரமாக துவக்கியது மகிழ்ச்சி,' என தெரிவித்துள்ளார்.
