/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
புரோ ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்
/
புரோ ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்
ADDED : பிப் 15, 2024 10:39 PM

புவனேஸ்வர்: புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4-6 என ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்களுக்கான புரோ லீக் ஹாக்கி 5வது சீசன் நடக்கிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, ஸ்பெயின், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. முதலிரண்டு போட்டியில் ஸ்பெயின், நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா, மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதல் பாதி முடிவில் இந்திய அணி 4-2 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஆஸ்திரேலியா 4 கோல் அடித்தது.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 (12, 20வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (18வது), மன்தீப் சிங் (29வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
நான்காவது போட்டியில் (பிப். 16) இந்தியா, அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

