ADDED : நவ 23, 2024 10:21 PM

நொய்டா: புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் அணி 31-28 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. உ.பி., மாநிலம் நொய்டாவில் நடந்த லீக் போட்டியில் குஜராத், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதினர். இதில் அபாரமாக ஆடிய குஜராத் அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. குஜராத் அணிக்கு பார்தீக் தஹியா (11 புள்ளி), குமன் சிங் (5) கைகொடுத்தனர். தெலுங்கு டைட்டன்ஸ் சார்பில் விஜய் 15, ஆஷிஸ் நார்வல் 7 புள்ளி பெற்றனர்.
குஜராத் அணி 12 போட்டியில், 3 வெற்றி, ஒரு 'டை', 8 தோல்வி என 20 புள்ளிகளுடன் 11வது இடத்தில் நீடிக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 43 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடர்கிறது. முதலிடத்தில் ஹரியானா அணி (46 புள்ளி) உள்ளது.
மற்றொரு லீக் போட்டியில் ஜெய்ப்பூர், ஹரியானா அணிகள் மோதின. இதில் ஹரியானா அணி 43-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
