தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி: ஜெய்ப்பூர் ஜெயம்

புரோ கபடி: ஜெய்ப்பூர் ஜெயம்

புரோ கபடி: ஜெய்ப்பூர் ஜெயம்


ADDED : அக் 20, 2024 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2024 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி 39-34 என பெங்கால் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணிகள் மோதின. பெங்கால் அணியினரை 'ஆல்-அவுட்' செய்த ஜெய்ப்பூர் அணி முதல் பாதி முடிவில் 21-18 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி 18 புள்ளி பெற்றது. முடிவில் ஜெய்ப்பூர் அணி 39-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர் அணி சார்பில் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் 15, அபிஷேக் மாலிக் 7 புள்ளி பெற்றனர். பெங்கால் அணிக்கு நிதின் தங்கர் (13 புள்ளி), மனிந்தர் சிங் (8) ஆறுதல் தந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us