தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி: ஜெய்ப்பூர் ஜெயம்

புரோ கபடி: ஜெய்ப்பூர் ஜெயம்

புரோ கபடி: ஜெய்ப்பூர் ஜெயம்


ADDED : பிப் 12, 2024 09:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 09:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல்கட்டா: புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி 67-30 என உ.பி., அணியை வீழ்த்தியது.

இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. இதுவரை ஜெய்ப்பூர், புனே, டில்லி, குஜராத் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்துள்ளன.

கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஜெய்ப்பூர் அணி, உ.பி., அணியை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணிக்கு அர்ஜுன் தேஷ்வால் நம்பிக்கை தந்தார். முதல் பாதி முடிவில் ஜெய்ப்பூர் அணி 23-11 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் அணியினர், உ.பி., வீரர்களை நான்கு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 67-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணிக்கு அர்ஜுன் தேஷ்வால் (20 புள்ளி) கைகொடுத்தார். உ.பி., அணிக்கு ககனா கவுடா (10 புள்ளி) ஆறுதல் தந்தார்.

இதுவரை விளையாடிய 20 போட்டியில் 14 வெற்றி, 3 'டை', 3 தோல்வி என 82 புள்ளிகளுடன் ஜெய்ப்பூர் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us