/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சொல்லி அடிச்ச 'கில்லி' புனே * முதல் கோப்பை வென்று அசத்தல்
/
சொல்லி அடிச்ச 'கில்லி' புனே * முதல் கோப்பை வென்று அசத்தல்
சொல்லி அடிச்ச 'கில்லி' புனே * முதல் கோப்பை வென்று அசத்தல்
சொல்லி அடிச்ச 'கில்லி' புனே * முதல் கோப்பை வென்று அசத்தல்
ADDED : மார் 01, 2024 10:37 PM

ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரில் முதன் முறையாக கோப்பை வென்றது புனே அணி. நேற்று நடந்த பைனலில் ஹரியானாவை வீழ்த்தியது.
இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடந்தது. மொத்தம் 12 அணிகள் மோதின. தமிழ் தலைவாஸ் அணி 9 வது இடம் (22ல் 9 வெற்றி, 13 தோல்வி, 51 புள்ளி) பிடித்து வெளியேறியது.
நேற்று நடந்த பைனலில் புனே, ஹரியானா அணிகள் மோதின. இத்தொடரில் கடைசியாக பங்கேற்ற 11 போட்டியிலும் வெற்றி பெற்று மிரட்டல் 'பார்மில்' களமிறங்கினர் புனே வீரர்கள். போட்டியின் முதல் புள்ளியை எடுத்தது புனே அணி. போட்டியின் முதல் 10 நிமிடத்தில் புனே 4-3 என முந்தியது.
அடுத்த சில நிமிடங்களில், இரு தரப்பிலும் ரெய்டு சென்ற வீரர்கள் பிடிபட, விறுவிறுப்பு அதிகரித்தது. போட்டியின் 17 வது நிமிடத்தில் ரெய்டு சென்ற புனே வீரர் பங்கஜ், 4 பேரை அவுட்டாக்க, 'சூப்பர் ரெய்டாக' அமைந்தது. முதல் பாதி முடிவில் புனே அணி 13-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி துவங்கியதும் ஹரியானா அணி, முதன் முறையாக ஆல் அவுட்டாக, புனே (21-15) பக்கம் வெற்றி திரும்பியது. கடைசி 5 நிமிடம் இருந்த போது, ஹரியானா அணி (17-25) புனேயை நெருங்க போராடியது. கடைசி 1 நிமிடம் இருந்த போது, ஹரியானாவின் சித்தார்த் 2 புள்ளி எடுத்த போதும், வெற்றிக்கு போதவில்லை. முடிவில் புனே அணி 28-25 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. புரோ கபடி அரங்கில் முதன் முறையாக சாம்பியன் ஆனது.
ரூ. 3 கோடி பரிசு
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் 2023ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னைக்கு ரூ. 20 கோடி பரிசு வழங்கப்பட்டது. இதைவிட 7 மடங்கு குறைவாக நேற்று கபடியில் கோப்பை வென்ற புனே அணிக்கு ரூ. 3 கோடி பரிசு தரப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஹரியானாவுக்கு ரூ. 1.8 கோடி கிடைத்தது.

