தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி: பாட்னா வெற்றி

புரோ கபடி: பாட்னா வெற்றி

புரோ கபடி: பாட்னா வெற்றி


ADDED : அக் 26, 2025 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: புரோ கபடி லீக் 'எலிமினேட்டர்-1' போட்டியில் பாட்னா அணி, ஜெய்ப்பூரை வீழ்த்தியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. நேற்று, டில்லியில் நடந்த 'எலிமினேட்டர்-1' போட்டியில் பாட்னா, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பாட்னா வீரர்கள், ஜெய்ப்பூர் அணியினரை மூன்று முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் பாட்னா அணி 30-13 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட ஜெய்ப்பூர் அணிக்கு 20 புள்ளி கிடைத்தது.

ஆட்டநேர முடிவில் பாட்னா அணி 47-32 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பாட்னா அணிக்கு அயன் (20 புள்ளி) கைகொடுத்தார். 'எலிமினேட்டர்-2' போட்டிக்கு பாட்னா அணி தகுதி பெற்றது. ஜெய்ப்பூர் அணி வெளியேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us